• Jan 19 2025

அப்பா அம்மாவுக்கு இடையே திடீர் விரிசல்.. தனிமையில் ஏ. ஆர் ரகுமானின் மகன் வெளியிட்ட பதிவு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக திகழ்பவர் தான் ஏ.ஆர். ரகுமான். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு என பலமொழிகளிலும் இவரது இசை பரவி உள்ளது. ஏ. ஆர் ரகுமான் இசையமைத்த பாடல்களுக்காகவே வெளிவரும் படங்களை பார்க்க செல்பவர்களும் அதிகம்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை மூத்த இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த மனிதனாகவும் திகழ்ந்து வருபவர் ஏ. ஆர் ரகுமான். இவர் பல மேடைகளில் தன்னுடைய காதல் மனைவி பற்றி பேசியிருப்பார்.

ஆனாலும் தற்போது பலருக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஏ. ஆர் ரகுமானின் மனைவி அவரை பிரிவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கு உள்ளேயும் உணர்ச்சி பூர்வமான பல விஷயங்கள் நடந்து வந்ததாகவும் இதன் காரணத்தினால் தான் இவ்வாறான முடிவு எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த விஷயத்தில் ஏ. ஆர் ரகுமான் தரப்பில் இருந்து எந்த விதமான தகவலும் வெளியிடப்படவில்லை. கடந்த 1995 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், தனது தாய் தந்தையின் பிரிவை நினைத்து அவருடைய  மகன் மிகவும் மன கலக்கத்துடன் பதிவொன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இதிலிருந்து மீளுவதற்கு தனிப்பட்ட நேரத்தை கொடுக்குமாறு தாழ்மையுடன் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதிலிருந்து மீண்டு வர தங்களுக்கு தனிமை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஏ. ஆர் ரகுமானின் மகனது பதிவும் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement