• Jan 19 2025

இயக்குநராக ஆசைப்படும் ஷாருக்கான் மகன்..! Netflix இல் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான பரிசு..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் கான், தனது இயக்குநர் வாழ்க்கையை தொடங்குவதற்கான மிகப்பெரிய அங்கமாக, Netflix மற்றும் Red Chilies Entertainment இணைந்து தயாரிக்கும் புதிய வெப்சீரிஸை இயக்கவுள்ளார்.

இந்த வெப்சீரிஸ் ஷாருக் கானின் மனைவி கௌரி கான் தயாரிப்பில் உருவாகுகிறது. இதன்மூலம் ஆரியன் கான் தனது கதைக்களம் மற்றும் இயக்க திறமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்த உள்ளார்.

2025-ல் வெளியாகவிருக்கும் இந்த வெப்சீரிஸ், பாலிவுட்டின் புதிய கோணத்தை காட்டும் வண்ணம் தயாராகி வருகிறது. ஷாருக் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கி ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரிசாக வழங்கவுள்ளனர்.

ரசிகர்கள் ஆரியன் கானின் இயக்கத்தில் உருவாகும் முதல் முயற்சியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement