• Sep 08 2024

புதிய படத்தில் கமிட்டான ஈழத்து பிக் பாஸ் பிரபலம்.. படத்தின் பெயரே சும்மா அள்ளுதே..!!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது புதுப்புது முகங்களும் ஈசியாக சினிமா துறையில் நுழைந்து பிரபலமாகி விடுகின்றனர். ஆரம்பத்தில் தான் பட வாய்ப்பு பெறுவதும் நடிகர்கள் ஆவதும் மிகப்பெரிய டாஸ்காக காணப்பட்டது. 

ஆனால் தற்காலங்களில் யூடியூபில் பிரபலங்களாக காணப்படும் ஒரு சிலரும், இன்ஸ்டாகிராம், டிக் டாக் ஆகியவற்றில் ரீல்ஸ் வெளியிடும் பிரபலங்களும் ஈசியாக சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்து விடுகின்றார்கள். அது மட்டும் இன்றி இவற்றுள் கெட்ட வார்த்தையை பேசி பிரபலமானவர்களும் நடிகர்களாக தற்போது அறிமுகமாகி வருகின்றார்கள். இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் லொஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் இவருடைய இலக்கை நோக்கி சென்னைக்கு வந்தார். அதன் பின்பு ஒரு சில படங்களில் நடித்தார். எனினும் அவை தோல்வியைத் தழுவின.


இந்த நிலையில், தற்போது லொஸ்லியா மரியநேசன் நடிக்கும் புதிய படம் பற்றிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் அட்லீ.

அதன்படி, 'MrHousekeeping' என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடிப்பதோடு அவருக்கு ஜோடியாக ஹரிபாஸ்கர் கமிட்டாகியுள்ளார். மேலும் இந்த படத்தை ThenandalFilms புரொடியூஸ் பண்ண உள்ளது.

மேலும் இந்த படத்தை அருண் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளதோடு, இதற்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement