• Jul 29 2026

இந்தியன் தாத்தா கதறவிட்டாரோ இல்லையோ கமல் புள்ளிங்கோ தியேட்டரை பதறவிட்டாங்க..!!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தள பக்கங்களில் தற்போது பேசுப் பொருளாக காணப்படும் திரைப்படம் தான் இந்தியன் 2. உலக நாயகன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

எனினும், தற்போது இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பது பற்றிய விவாதங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

அத்துடன் இந்தியன் 2 படத்தில் தாத்தா கதற விட்டாரா இல்ல சொதப்பி விட்டாரா என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், இன்றைய தினம் இந்தியன் 2 படம் தியேட்டர்களில் வெளியானதை முன்னிட்டு கமலஹாசனின் ரசிகர்கள் ஐந்து கிலோ கற்பூரத்தை கொளுத்தி அங்கு இருப்பவர்களை பதற வைத்துள்ளனர்.

அதாவது இந்தியன் 2 படத்தைக் கொண்டாடும் விதத்தில் ஐந்து கிலோ கற்பூரம் கொழுத்திய கமல் ரசிகர்கள், அதன் அருகில் இருந்த பேனரை கவனிக்காமல் விட்டு உள்ளார்கள். 

இதனால் குறித்த பேனரில் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அதன் பிறகு அது அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement