• Aug 23 2025

'பிடிச்சதை சாப்பிடுங்க... ஹேப்பியா இருங்க' சமந்தாவின் மறைமுக பதிலால் ரசிகர்கள் குழப்பம்..!

luxshi / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீப காலமாக திரைத்துறையில் மிகுந்த பிஸியாக இல்லாவிட்டாலும், சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து தனது தோற்றம், பயணங்கள், வாழ்க்கைமுறை சார்ந்த பதிவுகளின் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.


நடிகையாக மட்டுமின்றி, சமீபத்தில் 'சுபம்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள சமந்தா, தற்போது புதிய படங்களில் நடிக்க தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், சமந்தாவின் தற்போதைய 'ஸ்லிம்' ஆன தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. 


பல்வேறு சமூக ஊடகங்களிலும், ரசிகர்கள் அவர் பின்பற்றும் உணவுமுறை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தற்போது, சமந்தா பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் சிவப்பு இறைச்சியை தவிர்த்து, முழுக்க முழுக்க காய்கறி சார்ந்த உணவுகளையே எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

ஆனால், ஏற்கனவே சமந்தா பகிர்ந்திருந்த ஒரு மருத்துவச் சிகிச்சை தொடர்பான தகவல் பெரிய அளவில் எதிர்வினைகளை உருவாக்கியதால், தற்போது அந்த வகை கருத்துக்களில் மிகவும் கவனமாக நடந்து வருகிறார்.


இதனால் தான், தன்னை நேரில் சந்திக்கும் ரசிகர்கள் அல்லது சமூகவலைத்தளங்களில் கேட்கப்படும் 'டயட் ரகசியம் என்ன?' என்ற கேள்விக்கு, சமந்தா நேரடியாக பதிலளிக்காமல்,

"பிடித்ததை சாப்பிடுங்க!"

என்ற கூலான பதிலுடன் தப்பித்து வருவதாக திரைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அவரது மெளனம் மற்றும் பதில்கள், ரசிகர்களிடம் அதிருப்தியையும், புதுமையான ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement