சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அங்கு துரைமுருகனை கிண்டல் அடிக்கும் வகையில் பேசி இருந்தார்.
அதாவது நான் ஆச்சரியப்படுகின்ற விஷயம் என்னவென்றால், ஒரு பள்ளிக்கு புதிய மாணவர்களால் பிரச்சனை இல்லை. பழைய மாணவர்களால் தான் பிரச்சனை. பழைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்து வகுப்பறையை விட்டு செல்லாமல் இருப்பார்கள். இங்கும் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கின்றார்கள். அதிலும் துரைமுருகன் என்பவர் உள்ளார். கலைஞர் கண்ணில் விரல் விட்டு ஆட்டியவர். இவர்களை எல்லாம் கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ என்று பேசியிருந்தார்.
இந்த விடயம் இணையத்தில் பேசு பொருளானது. அதன் பின்பு அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி பல் விழுந்து தாடி வளர்த்து சாகுர வயதில் கூட நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த இரண்டு பேச்சுகளும் இணையத்தில் பேசு பொருளானது. தொடர்ந்து விமான நிலையம் சென்ற ரஜினியிடம் துரைமுருகன் கிண்டல் அடித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்குப் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்களுடைய நட்பு எப்போதும் போல தொடரும் என தெரிவித்துள்ளார்.
அதைப்போல துரைமுருகனும் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் நானும் ரஜினியும் தொடர்ந்து நண்பர்களாகவே இருப்போம் எனக் கூறியுள்ளார். இந்த பிரச்சனைக்கு தற்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Listen News!