• Mar 08 2026

இளையராஜா இசையில் உருவாகும் ‘அந்தோனி’… பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதுமையான முயற்சிகளும், புதிய படைப்பாளிகளின் வருகையும் தொடர்ந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில், கயல் வின்சென்ட், டி ஜே பானு நடிப்பில், அறிமுக இயக்குநர்கள் ஜெனோசன் – சுகிர்தன் இணைந்து இயக்கும் புதிய திரைப்படமான ‘அந்தோனி’ தற்போது சினிமா வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் First Look போஸ்டர் தற்பொழுது வெளியிடப்பட்டு, இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.


இந்த படத்திற்கு இசையமைப்பது இசைஞானி இளையராஜா என்பதே, ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவின் இசை என்றாலே ஒரு தனி தரமும், ஆழமான உணர்வுகளும் ரசிகர்களுக்கு நினைவிற்கு வரும் நிலையில், ‘அந்தோனி’ திரைப்படத்தின் இசையும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அந்தோனி’ திரைப்படத்தின் First Look போஸ்டரை, நடிகர் துல்கர் சல்மான் மற்றும் சீனு ராமசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வைரலாக பரவத் தொடங்கியது.

துல்கர் சல்மான் தனது பதிவில், புதிய இயக்குநர்களின் முயற்சியை பாராட்டியதுடன், ‘அந்தோனி’ படத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement