தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் அஜித் குமார், தற்போது சினிமாவைத் தாண்டி தனது கனவுப் பயணமான கார் ரேசிங்கில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். நடிப்பு, புகழ், ரசிகர் கூட்டம் ஆகியவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு, தனது ஆர்வத்திற்காக சர்வதேச ரேசிங் அரங்கில் தைரியமாக பங்கேற்று வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில், துபாய்- அபுதாபி பகுதிகளில் நடைபெற்று வரும் ஆசிய லீ மேன்ஸ் (Asian Le Mans Series) கார் ரேசிங் தொடருக்காக அஜித் குமார் தற்போது துபாயில் தங்கியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி ரேசர்கள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியாவிலிருந்து அஜித் குமார் பங்கேற்பது, இந்திய ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டி களத்தில் அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற யாஸ் மரினா சர்க்யூட்டில் (Yas Marina Circuit) நடைபெற்ற இந்த சந்திப்பு, ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கட் பிரபு – அஜித் குமார் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே வைரலாக பரவின.
இந்த சந்திப்புக்குப் பிறகு, இயக்குநர் வெங்கட் பிரபு தனது X தளப் பக்கத்தில், அஜித் குமாரை சந்தித்த அனுபவம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ரீடேக் இல்லை. ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் இல்லை. உண்மையான வேகம், அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மரினா சர்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மையில் மெய்சிலிர்க்கும் அனுபவம். அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை… இதுதான் அஜித் குமார்.” என்று தெரிவித்துள்ளார்.
Listen News!