தமிழ் சினிமாவில் 2026ம் ஆண்டு பொங்கல் ஒரு பெரிய திருவிழாவாக அமையும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டதால், இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் தமிழ் திரையுலகில் ஒரு செம கொண்டாட்டமாக இருக்கும் என பேசப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் திடீரென மாற்றமடைந்துள்ளன.
முதலில், விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படம் இன்று வெளியாக வேண்டியிருந்தது. படம் தொடர்பான புரமோஷன்கள், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், தணிக்கை குழு (Censor Board) சான்றிதழ் கிடைக்காததால் படம் ரிலீஸ் ஆகவில்லை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல், நாளை ஜனவரி 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சிவகார்த்திகேயன் நடித்த “பராசக்தி” திரைப்படமும் தற்போது ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகியுள்ளது. இந்த இரண்டு முக்கிய படங்களின் திடீர் பின்வாங்கல், 2026 பொங்கல் ரேஸை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

இதனால் திரையரங்குகள் வெறிச்சோடிப் போய் உள்ளன. இவ்வாறு பொங்கல் ரேஸில் பெரிய படங்கள் பின்வாங்கியதால், தற்போது தயாராகியுள்ள வேறு சில படங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் இல்லாத இந்த சூழ்நிலையில், நடுத்தர மற்றும் சிறிய படங்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என சொல்லப்படுகிறது.
அந்த வகையில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகியுள்ள “திரௌபதி 2” திரைப்படம், இந்த பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“திரௌபதி” திரைப்படம் வெளியான போது, அதன் கதைக்கரு, கருத்து மற்றும் சர்ச்சைகள் காரணமாக பெரும் விவாதத்தை உருவாக்கியது. அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான “திரௌபதி 2” தற்போது தயாராகியுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் மோகன் ஜி தானே தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் “திரௌபதி 2” பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!