• Jan 22 2026

கால் பங்கு சம்பளம் தான்… ஊதியத்துக்காக இன்னும் போராடுகிறேன்.! – சுதா கொங்கரா ஆதங்கம்

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் சுதா கொங்கரா, தற்போது சம்பள பாகுபாடு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் இயக்குநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சம ஊதியம் தொடர்பான போராட்டங்கள் குறித்து அவர் கூறிய கருத்துகள், சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது.

சுதா கொங்கரா தனது சமீபத்திய பேட்டியில்,“ஒரு படத்துக்கு எனக்கு வழங்கப்படும் சம்பளம், ஆண் இயக்குநர்களை ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு. சம ஊதியத்துக்காக நான் இன்று வரை போராடிக் கொண்டு தான் இருக்கிறேன்.” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.


மேலும் அவர், " நானும் பெரிய படங்களை கஷ்டப்பட்டுத் தான் எடுக்கிறேன். சம்பளம் குறைவாக இருந்ததாலும் நான் பல பட வாய்ப்புகளை நிராகரித்தது உண்டு." எனக் கூறியுள்ளார். 

இதன் மூலம், படத்தின் வசூல், வெற்றி, மார்க்கெட் மதிப்பு போன்றவை பெண்கள் இயக்குநர்கள் மற்றும் நடிகைகளுக்கு சமமாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதனை வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டி வெளியானதும், சமூக வலைதளங்களில் பலரும் சுதா கொங்கராவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement