• Jul 31 2025

" ஜனநாயகன் " படத்தின் business இல் அதிரடி மாற்றம்..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் h .வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் "ஜனநாயகன் " முழுக்க அரசியல் பின்னனியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். மேலும் விஜயுடன் இணைந்து பூஜா ஹெட்ஜ் ,பிரகாஷ்ராஜ் ,பொப்பி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ott மற்றும் சட்லைட் வியாபாரங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமை மாத்திரம் பேச்சு வார்த்தைகளில் உள்ளது.


மேலும் இது குறித்து எல்லா business நடவடிக்கைகளையும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் மேற்கொண்டால் சுலபமாக இருக்கும் என நினைத்து படக்குழு ஒத்திவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் இடம்பெறவுள்ள காரணத்தினால் இந்த முடிவினை எடுத்திருக்கலாம். மேலும் இது தளபதியின் இறுதி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement