• Jun 27 2026

அவனை வளர்த்து சினிமா துறையையே கெடுக்காதீங்க! - திவாகரை விளாசிய ஆதவன்

shali / 2 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான திவாகர் குறித்து, தொகுப்பாளர் ஆதவன் கூறிய கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாகி வருகின்றன.


அவர் பேசியதில், “நான் எங்காவது நிகழ்ச்சி செய்தால் நீங்கள் கைதட்டவில்லை என்றாலும் பரவாயில்லை; என்னை கேவலப்படுத்துங்கள், திட்டுங்கள்; ஆனாலும் இவ்வளவு மரியாதை இல்லாமல் பேசும் ஒருவரை வளர்த்து சினிமா துறையை பாதிக்காதீர்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், பொதுமக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகள் பயன்படுத்தும் பழக்கம் தொடர்ந்தால், ஒருநாள் அதற்கான விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதங்களை கிளப்பியுள்ளது. சிலர் ஆதவனின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சமீபத்தில் திவாகர் தன்னை மா.கா.பா ஆனந்த் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக புகார் அளித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் இணைந்து தற்போது தொலைக்காட்சி வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.


Advertisement

Advertisement