• Apr 26 2026

அரசியல் குறித்த கேள்விகளை அசால்ட்டாக டீல் செய்த மம்மூட்டி.! முழுவிபரம் இதோ

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசியல் சூழல் குறித்து பலரும் ஆர்வமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழக அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


இந்நிலையில், படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை வந்திருந்த மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் கேரளா தேர்தல் முடிவுகள் பற்றியும், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பதையும் கேட்டனர்.

ஆனால், அந்த கேள்விகளுக்கு மம்மூட்டி மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் “ஒன்னும் தெரியாது” என்று ஒற்றை வரியில் பதில் அளித்தார். இதை கூறியவுடன் சிரித்தபடியே அங்கிருந்து சென்ற அவரது அணுகுமுறை பலரது கவனத்தை ஈர்த்தது.

மம்மூட்டியின் இந்த ரியாக்ஷன் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. சிலர் இதை அவரது நகைச்சுவை உணர்வாக பார்க்க, மற்றவர்கள் அரசியல் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான புத்திசாலித்தனமான பதிலாகவும் கருதுகின்றனர்.


Advertisement

Advertisement