• Jan 19 2025

சொந்த அடையாளத்தை மறைத்து அரசியலுக்கு வர வேண்டுமா? சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வந்த விஜய், தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், நெற்றியில் பொட்டு வைத்த விஜயின் போட்டோவிற்கு பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது என அமீர் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த ஓராண்டிற்கு மேலாகவே தனது அரசியல் பணிகளை செயற்படுத்தி வருகிறார்.

அதன்படி அண்மையில் மாணவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு தனது கையால் பரிசு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவே சென்று நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார்.


இதை அடுத்து, நடிகர் விஜய் அரசியலில் வருவது உறுதியாக, அவரும் அவ்வாறே தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்தார்.

எனினும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள,சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம் என்று விஜய் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அமீர், நடிகர் விஜய் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், நடிகர்  விஜயின் முழு பெயர் ஜோசப் விஜய். ஆனாலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் விஜய் என்று மட்டுமே பதிவிட்டுள்ளார். இவ்வாறு அவர் விஜய் என்று பதிவிட்டுள்ளதும், பொட்டு வைத்துள்ளதும் அதற்குப் பின்னாலும் அரசியல் இருப்பது என்பதுதான் உண்மை.


அதாவது, நான் எல்லோருக்கும் உரியவன்.. என்னை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் என பார்க்காதீர்கள். என்று விஜய் சொல்ல விரும்புகிறார். அவர் தன்னை ஒரு ஆன்மீகவாதியாகவே காட்டிக் கொள்ள விரும்புகிறார். இதில் எந்த ஒரு தவறும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  பிரபல மருத்துவர் காந்திராஜ்  அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், விஜயின் மெர்சல் படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டார் விஜய்... அதில் Jesus Saves என்று தலைப்பு வைத்து தன்னுடைய முழு பெயர் C. Joseph Vijay  என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனாலும், தற்போது அரசியலுக்குள் நுழைந்த பின்பு அவர் வெளியிட்ட அறிக்கையில் Jesus Saves என்ற தலைப்பும் இல்லை, விஜய்க்கு முன்னால் ஜோசேப்பும் இல்லை. இவ்வாறு உங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அரசியலுக்கு வர வேண்டுமா? என சர்ச்சையை கிளப்பி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement