பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைபடங்கள் தோல்வியை கொடுத்தாலும் தளராமல் அடுத்த அடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் "என்னை எனக்கே புதிதாய் காட்டிய படம் இது தான்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
ஜெயம் திரைப்படம் கொடுத்த வெற்றியால் தனது பெயரையே ஜெயம் ரவி என்று மாற்றிக்கொண்ட இவர் அடுத்து அடுத்து பல படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்திய பேட்டில் ஜெயம் ரவி தனது சினிமா பயணத்தின் "பேவரெட் படம் என்றால் அது பேராண்மை தான். என்னுடைய சினிமா பயணத்தில் பேராண்மை படம் மிகவும் சிறப்பானது. என்னை எனக்கே புதிதாய் காட்டிய படம் என்றால் இது மட்டும் தான் என்று கூறினார்".
மேலும் இது பற்றி பேசிய இவர் "நம்மால் இதைச் செய்ய முடியும், சினிமாவில் இன்னும் நான் சாதிக்க வேண்டியது அதிகம் என்று உணர்த்தியதும் இப்படம் தான். இப்படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் சார் தற்போது நம்முடன் இல்லையென்றாலும், பேராண்மை படத்தின் மூலமாக இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்" என கூறியுள்ளார்.
Listen News!