அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். மேலும் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகவும், பகத் பாஸில் வில்லனாகவும் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் முதல் நாளிலேயே 247 கோடிகளை வசூலித்து பிளாக் ஆபிஸ் லிஸ்டில் இருந்த ஏனைய பிரபலங்களின் படத்தின் சாதனையை முறையடித்திருந்தது.
d_i_a
இதை தொடர்ந்து 11 நாட்களில் கிட்டத்தட்ட 1450 கோடிகளை வசூலித்த புஷ்பா 2 திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களுக்குள்ளேயே 2000 கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பேசப்பட்டாலும், புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது உயிரிழந்த பெண் விவகாரத்தில் அல்லு அர்ஜுன் சிறைக்கும் சென்று வந்திருந்தார். இது தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது உயிரிழந்த பெண்ணின் மகன் வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே இதற்கு அல்லு அர்ஜுன் எவ்வாறான நடவடிக்கையை எடுக்கப் போகின்றார்? இதனால் அவர் சந்திக்க போகும் விளைவுகள் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!