• Aug 12 2025

தனக்கே விதித்த கட்டுப்பாடுகளை உடைத்த தமன்னா...! என்ன காரணம் தெரியுமா?

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

சமீபமாக தனது திரையுலகப் பயணத்தில் புதிய பரிமாணங்களை தேடி வருகிற நடிகை தமன்னா, திடீர் கவர்ச்சி காட்சிகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் ஈடுபடத் தொடங்கியதற்கான காரணங்களை பகிர்ந்துள்ளார்.


பேட்டியில் பேசிய தமன்னா, “நடிகையாக என் பயணத்தின் தொடக்கத்தில், சில தனிப்பட்ட கட்டுப்பாடுகளை நான் விதித்துக்கொண்டேன். குறிப்பாக ‘நோ கிஸ்’, ‘நோ கவர்ச்சி’ போன்ற நிபந்தனைகள் காரணமாக, சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் மனதிற்குள் உருக்கும் சில படங்களை நான் தவறவிட்டேன் என்ற பச்சாத்தாபம் பிறந்தது,” என்று கூறினார்.


“சில ஆண்டுகளுக்குப் பிறகு, எனது மனநிலையும், உலகை பார்ப்பது பற்றிய பார்வையும் மாறியது. ஒரு நடிகையாக எனது எல்லைகளை விரிவுபடுத்தும் நிமித்தமாக, நான் முன்பு வைத்த கட்டுப்பாடுகளை முறித்து, கதையின் தேவைப்படும் இடங்களில் கவர்ச்சி காட்சிகளிலும் நடிக்கத் தயார் ஆனேன்,” என்றார்.


தமன்னாவின் இந்த மாற்றம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகையின் கலை சுதந்திரம் மற்றும் தொழில்முறை வளர்ச்சி குறித்து இவையெல்லாம் முக்கியத்துவம் பெறும் நேரத்தில், தமன்னாவின் முடிவுகள் குறித்து பலரும் ஆதரவுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement