மருத்துவ துறையை மையமாகக் கொண்டு ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள வெப் சீரிஸ் ‘ஹார்ட்பீட்’, அதன் முதல் சீசனிலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது. பல புதுமுகங்களை அறிமுகப்படுத்திய இந்த தொடரில், கதையின் மையமான இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்கள் ரதி மற்றும் ரீனா.
இளம் வயதில் ஏற்பட்ட காதலில் கருவுற்று, குழந்தையை காப்பகத்தில் விட்டுவிடும் ரதியின் கதையும், அந்தக் குழந்தை தன் அம்மா தான் டாக்டரான ரதி என்பதை அறிந்து, அதே மருத்துவமனையில் டாக்டராக சேர்ந்திருப்பதுமே கதையின் திருப்புமுனை.
இப்போது, இரண்டாவது சீசனில் ரதியின் முன்னாள் காதலர் எண்ட்ரி கொடுத்துள்ளதால், கதைக்கு புதிய பரபரப்பும் வந்துள்ளது. இந்த ‘ரதி’ கதாப்பாத்திரத்தில் முதலில் மஞ்சு வாரியர் நடிக்க இருந்ததாக தகவல்கள் வந்துள்ளன. பின்னர் அபிராமி, மேகா ராஜா, ஸ்வாதிகா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், கால்ஷீட் பிரச்சனை, வயது வித்தியாசம் போன்ற காரணங்களால் அவர்கள் விலகியதாகவும் தெரிய வந்தது.
இந்நிலையில், ரதி கதாப்பாத்திரத்தில் அனு மோல் தேர்வாகி நடித்துள்ளார். தற்போது ரசிகர்கள், “இந்த கதாப்பாத்திரத்திற்கு அனு மோலை தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள்” எனக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இரண்டாவது சீசன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, விரைவில் மூன்றாவது சீசனும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!