தமிழ் சினிமாவில் புதுமையான முயற்சிகளை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் தான் "கிஸ்" (KISS).
இந்த படத்தில், காதலை ஒரு புதுமையான கோணத்தில் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கு முக்கிய சிறப்பம்சமாக, முன்னணி நடிகரும், மக்களின் மனதில் “மக்கள் செல்வன்” என்ற பெயரைப் பெற்ற விஜய் சேதுபதி, தனது குரலோசையினை வழங்கியுள்ளார் என்பது மிகவும் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக தற்பொழுது மாறியுள்ளது.
'கிஸ்' படத்திற்காக விஜய் சேதுபதி செய்த குரல் பதிவு, கதையை மேலும் உயிரூட்டும் வகையில் அமைந்துள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. அவரது குரல், கதையின் ஆழம் மற்றும் உணர்வுகளை பார்வையாளர்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!