தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். தொடர்ந்து சூர்யாவை வைத்து "rolex " படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இவருக்கு மனசுக்குள் ஹீரோ ஆகுவதற்கான ஆசை ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தினை சண் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் சுருதிகாசனுடன் நடித்து வெளியாகிய ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்த படத்தில் நடிகையாக சுருதிகாசன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்த அதிகாரபூர்வ செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!