• Jul 17 2025

இலங்கையை கலக்கும் பிக்பாஸ் பிரபலம்.! யார் தெரியுமா.?

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்த நடிகர் ராஜூ, தற்போது தனது புதிய திரைப்படமான “Bun Butter Jam”இன் விளம்பர நிகழ்விற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.


இலங்கையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு, புகைப்படங்கள், ரசிகர்களுடன் நிகழ்ந்த சந்திப்புகள் இவை அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாக வைரலாகி வருகின்றது.


இந்தப் படம், காதல், நகைச்சுவை, குடும்ப பிணைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இது ராஜூ முக்கிய கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் என்பதாலேயே, இதற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.


படத்தின் தலைப்பே ரசிகர்களிடம் சுவாரஸியத்தை உருவாக்கியுள்ளது. உணவுப் பொருளை மையமாக வைத்து உருவாகும் காதல் கதை என சொல்லப்படும் இந்த படத்தின் புரொமோஷன் இப்போது இலங்கையில் நடைபெற இருக்கிறது.

Advertisement

Advertisement