தனது நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள நடிகர் விஷால், தற்போது தனது 35வது திரைப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடக்கியுள்ளார்.
படக்குழுவினர் வெளியிட்ட பதிவுகள், புகைப்படங்கள், மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய படம் இன்று (ஜூலை 14) காலை பிரபல ஸ்டூடியோவில் பூஜையுடன் ஆரம்பமாகியது. விஷால் உட்பட படக்குழுவினர் மற்றும் சில முக்கியமான திரை பிரபலங்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
படத்தின் தலைப்பு இதுவரை வெளிவராதபோதிலும், இது ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் என தயாரிப்பு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
Listen News!