• Jan 18 2025

அம்மாவுக்கு ஹாட் அட்டாக்! சூப்பர் ஸ்டார் செய்த உதவி! மௌனம் பேசியதே நடிகை யார் தெரியுமா!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌனம் பேசியதே சீரியலின் கதாநாயகியாக  இருப்பவர் சின்னத்திரை நடிகை ஜோவிதா. இவர் இந்த சீரியலுக்கு முன் பல சீரியல்களில் நடித்து உள்ளார். அத்தோடு முக்கிய நடிகரின் மகளாக இருக்கிறார். இவர் குறித்து விரிவாக பார்ப்போம் வாங்க. 


காமெடி , குணச்சித்திர கதாபாத்திரம் என சினிமா துறையில் வலம் வந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் தான் ஜோவிதா. இவர் பூவே உனக்காக , அருவி தற்போது மௌனம் பேசியதே போன்ற கதைகளில் நடித்து கலக்கி வருகிறார். இவர் பேட்டி நிகழ்ச்சிகளில் கதைப்பதை பார்த்து பலரும் இவர் திமிரா இருக்கிறார் என்று விமர்சனம் கூறி வந்தார்கள். ஆனால் இவர் எனது குடும்பம் எனக்கு முக்கியம் என்று வாழ்ந்து வரும் நடிகை. 


தனது அம்மாவிற்கு ஹாட் அட்டாக் வந்ததன் பின்னர் குடும்பமே உடைந்து போய்விட்டது. அதன் பின்னரே குடும்பத்துடன் தனது நேரங்களை அதிகம் செலவழித்து வருகிறார். லிவிங்ஸ்டன் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர்  கிட்டாரிஸ்ட்டாக இருந்து இருக்கிறார். அவரை பார்த்தே இசையின் மீதுஜோவிதாவுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பி.சுசிலா முன்னிலையிலும் குடும்பத்துடன் பாடல் எல்லாம் பாடி காட்டியுள்ளார்கள்.


நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஜோவிதாவின் அம்மாவிற்கு  ஹாட் அட்டாக் வந்த நேரம் 22 லட்சம் கொடுத்து உதவி இருக்கிறார். ஜோவிதாவின் குடும்பத்திற்கும் ராஜனிகாந்த்தின் குடும்பத்திற்கும் நல்ல பாண்டிங்  இருக்கிறது. ஜோவிதா சினிமா என்று திரிந்தாலும் இவரின் தங்கை படிப்பு என்று சுற்றுகிறார். அவருக்கு கேமரா என்றால் அலர்ஜியாம். 


சமீபத்திய பேட்டில் கூட " அம்மாவுக்கு ஹாட் அட்டாக் வந்த நேரம் எனக்கு ரோமென்ட் காட்சி இருந்தது என்னுடைய எமோஷனலை வெளிக்காட்டாமல்  நடித்தேன்" என்று கூறியுள்ளார். ஜோவிகாவின் கைடர் நடிகை ஊர்வசி தான். இதனை இவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  மௌனம் பேசியதே  என்ற சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  

Advertisement

Advertisement