2024 ஆம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி அமர்க்களமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து இந்த சீசன் சற்று சலிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தார்கள். கிட்டத்தட்ட 50 நாட்கள் சுமாராக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அதற்குப் பிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது.
பல்வேறு தடைகளைத் தாண்டி முத்துக்குமரன், விஷால், ரயான், பவித்ரா, சௌந்தர்யா ஆகிய ஐந்து பேரும் பைனலுக்குள் சென்றார்கள். அதில் ரயான் முதலாவது ஆளாகவே எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பின்பு பவித்ராவும் வெளியேறினார்.
இறுதியில் மூன்றாம் இடம் பிடித்த விஷாலை எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. அதன் பின்பு முத்துக்குமரனின் கைகளை உயர்த்தி அவர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனால் சௌந்தர்யா ரன்னர் ஆப் ஆனார். இவ்வாறு இந்த சீசன் நேற்றைய தினத்தோடு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சௌந்தர்யா தனது பெற்றோர் மற்றும் காதலர் ஆன விஷ்ணு விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!