நியூஸ் 18 சார்பில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை பெற்றவர்களுக்கு வழங்கப்படும் "அமிர்த ரத்னா" விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை வழங்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் தடகள வீராங்கனை மற்றும் இந்திய பாராளுமன்ற மேலவை உறுப்பினர் பி.டி. உஷா, தனுஷுக்கு விருதை வழங்கி அவரை கௌரவித்தார்.
தனுஷ், தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகப் பல்வேறு பரிமாணங்களில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச மட்டத்திலும் இந்திய சினிமாவை எடுத்துச்செல்லும் முயற்சிகளுக்காகவும் தனுஷ் பெருமை சேர்த்துள்ளார்.
அமிர்த ரத்னா விருதைப் பெறும் வாய்ப்பு தந்ததற்காக நியூஸ் 18 மற்றும் பி.டி. உஷாவுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்த தனுஷ், இது தன்னை மேலும் உழைக்கத் தூண்டும் என்றும் கூறினார்.இந்த அங்கீகாரம், தனுஷின் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகத்திற்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!