• Jan 18 2025

சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் காலமானார்..!ரசிகர்கள் அதிர்ச்சி

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல பிரபல தொடர்களில் நடித்த நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் இன்று காலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவருக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் தீவிர சிகிச்சை மேற்கொண்டுவருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருந்தாலும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.


யுவன்ராஜ் நேத்ரனின் மனைவியும் சின்னத்திரை நடிகையாவார், எனவே இந்த குடும்பத்தின் துயரம் சின்னத்திரை உலகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அவரது மறைவு திரையுலக ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. யுவன்ராஜ் நேத்ரனின் நடிப்பு ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கின்றோம்.

Advertisement

Advertisement