• Oct 30 2024

கண்ணே கலைமானே சீரியல் நடிகை பானு யார் தெரியுமா?- சீரியல் நடிகரைத் தான் காதலிக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் கண்ணே கலைமானே. கண் தெரியாத பெண் தனது கணவருடன் இணைவாரா தனது குழந்தைக்கு தனது பிள்ளையை அடையாளம் காட்டுவாரா என்பதை மையப்படுத்தியே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் பாணு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பவித்ரா. அவர் யார் என்ற விடயத்தை வாங்க பார்க்கலாம்.இவங்க கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பான அம்மன் சீரியலில் நடித்து வந்தார். அம்மன் சீரியல் மூலம் தான் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.


தமிழ் சரியாகப் பேசத் தெரிந்த இவர் தமிழ் பொண்ணு இல்லையாம் கர்நாடகாவில்ஏப்ரல் 14ம் திகதி பிறந்தார். இவருடைய அம்மா தான் கோயம்புத்துாரில் வசித்து வருகின்றார். சீரியலுக்காக தனது பெற்றோரைப் பிரிந்து சென்னையில் தங்கி இருக்கிறார். இவருடைய பெஸ்ட் சீரியல் மாங்கல்யம் தந்துதானே. ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க இவங்க வீட்டில ஓகே சொல்லலையாம் இருந்தாலும் வந்த சந்தர்ப்பத்தை விடக் கூடாது என்பதற்காகவே அந்த சீரியலில் நடித்தார்.


அத்தோடு மாங்கல்யம் தந்துதானே சீரியலில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவருக்கு தன்னுடைய அப்பா என்றால் ரொம்ப பிடிக்குமாம்.இதுவரை மூன்று சீரியலில் நடித்திருக்கும் இவர் தன்னுடன் அம்மன் சீரியலில் கதாநாயகனாக நடித்த மலையாள நடிகரான பவன்ஜித் என்பவரை காதலித்து வருகின்றாராம். முதலில் நட்பாக இருந்த இவர்கள் தற்பொழுது காதலர்களாக மாறியுள்ளதோடு விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.


இவரது இன்ஸ்பிரேஷன் நடிகை ரம்யா கிருஷ்ணன் தானாம். அவங்களை வச்சு தான் அம்மன் சீரியலில் நடித்திருந்தாராம். ரொம்ப சைலண்டான பொண்ணான இவர் ஒழுங்காக சாறி கட்டாமல் விட்டால் இவரது காதலன் திட்டுவாராம். இது தவிர இருவரும் கியூட்டான ஜோடியாகவே வலம் வருகின்றனர்.அம்மன் சீரியல் மூலம் இவருக்கு கெரியர் மட்டுமல்ல வாழ்க்கை கிடைச்சதை நினைச்சு சந்தோமாக இருக்கின்றாராம்.

Advertisement