• Jan 18 2025

யார் இந்த பிக்பாஸ் நிவாஷினி... இவர் வாழ்க்கையில் இத்தனை கிண்டல்கள், கேலிகளா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டிருப்பவரே நிவாஷினி. இவர் பிக்பாஸ் வீட்டில் அசல் கோளாறுடன் இணைந்து பண்ணிய காதல் லீலைகள் ஏராளம். இந்த வீட்டிற்குள் கட்டிப்பிடி வைத்தியத்திற்குப் பேர் போனவர்களாக அசல்-நிவா ஜோடி விளங்கி இருந்தனர்.


நிவாஷினி என்பதை விட இவரை நிவா ஆகவே பலருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாது இவரை ரொகானா என்று தான் எல்லோருமே செல்லமாக கூப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாது இவர் இலியானா மாதிரி இருப்பதனால் இவரை நிறையப்பேர் இலியானா என்றும் அழைத்து வருகின்றனர். அதாவது சின்னத்திரை இலியானா என ஒரு சிலரால் சிறப்பாக அழைக்கப்பட்டு வருகின்றார்.

இவர் 1999 இல் பிறந்தவர். இவருக்கு ரொமான்ஸ் என்பது வரவே வராதாம். இவர் ரொம்பவே எமோஷனல் ஆன ஒரு நபர் ஆவார். இவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவராக இருந்தாலும் ரொம்பவே நன்றாக தமிழில் பேசக் கூடியவர். 

இவரின் சொந்த ஊர் சிங்கப்பூராக இருந்தாலும் இவரின் அம்மா பரமக்குடியை சேர்ந்தவர். இவரின் வீட்டில் 3அண்ணா, 1அக்கா உள்ளனர். இந்த வீட்டினுடைய கடைக்குட்டி இவர் தான். நான் ஏன் இந்த உலகத்தில பிறந்தேன் என்ற அளவிற்கு எல்லாம் நிவாஷினி வருத்தப்பட்டிருக்கின்றார். 

அதற்கு காரணம் சிறு வயதில் இவருக்கு வந்த தோல் சம்பந்தமான நோய் தானாம். முகத்தில் ஒரு பக்கத்தில் புள்ளிப் புள்ளியாக அசிங்கமாக இருந்திருக்கின்றது. இதனைப் பார்த்த நிவாஷினி வீட்டை விட்டு வெளியவே வரமாட்டார். வீட்டிற்குள் இருந்து அதையே நினைத்து நினைத்து கவலைப்படுவார்.


மேலும் நிறையப்பேர் இவரின் தோற்றத்தைப் பார்த்து கேலி, கிண்டல் எல்லாம் செய்தார்கள். இதனால் ஸ்கூல் போகமாட்டேன் என வீட்டில் அடம்பிடித்தார். இருப்பினும் அம்மாவின் முயற்சியால் மட்டுமே இவர் படித்திருக்கின்றார். இவரின் அம்மா நிவாஷினி எஞ்சினியர் ஆகணும் என்று நினைத்திருந்தார். ஆனால் நிவாஷினிக்கோ கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் சுத்தமாகவே பிடிக்காது. 

இவருக்கு மீடியாவிற்குள் நுழையணும் என்ற ஆசை நிறையவே இருந்தது. அங்குள்ளவர்களுக்கு காபி போட்டுக் கொடுக்கின்ற வேலையாய் இருந்தாலும் பரவாய் இல்லை நான் மீடியாவிற்குள் போகவே வேண்டும் எனக் கூறிட்டு இருந்தார்.

அதுமட்டுமல்லாது பேஷன் பிசினஸ் ஒன்றையும் இவர் ஆரம்பித்து வந்தார். ஒரு கட்டத்தில் அதற்கு மாடலாக இவரே மாறியும் இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தார். இவர் ஒரு சில ஆல்பம்ஸ் கூடப் பண்ணியிருக்கார்.

அதுமட்டுமல்லாது 'ஸ்டூடண்ட் ராமா' என்ற வெப் சீரிஷிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு 'உன்னைக் கண் தேடுதே, முள்ளும் மலரும்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் ஜிவிஎம், கமல்ஹாசன் ஆகியோரின் தீவிர ரசிகை ஆவார்.

இவருக்கு காதலில் நிறையவே விருப்பம் கொண்டவர். அந்தவகையில் ஒரு நபர் கூட 3வருட உறவில் இருந்திருக்கின்றார். இந்தக் காதலின் மூலமாகத்தான் ஒரு டிகிரியையும் முடித்திருக்கின்றார். அதுவும் லண்டனில் படித்திருக்கின்றார். இவர் எளிதில் யாரையும் நம்ப மாட்டார். ஆனால் தான் காதலித்த அந்த நபரை முழுமையாக நம்பி இருக்கார்.

அவர் ஆசைப்பட்ட மாதிரி அந்த வாழ்க்கை அமையாததால் அந்த காதலை பிரேக்அப் செய்தார். அதனைத் தொடர்ந்து இனி வாழ்க்கையில் யாரையும் நம்பக் கூடாது என முடிவெடுத்தாராம். இவர் டமைஸ் என்ற செக்கண்டறி ஸ்கூல் ஒன்றில் தான் படித்திருக்கின்றார்.

இவங்க அம்மா சிபியாவில் வெல்டன் வெர்க் பண்ணி இருக்கின்றார். சின்ன வயசில் இவர்களுக்கு சொந்த வீடு இருக்கவில்லை. வாடகை வீட்டில் தான் இருந்தார்கள். அதிலும் அண்ணன்கள் 3பேரும் வேறு வீட்டில் இருந்தார்கள். இவர் அக்கா வீட்டில் இருந்தார். அதனால் அம்மாவைக் கூடப் பார்க்க முடியாமல் தவித்திருக்கின்றார்.

இவ்வாறாக மனசளவில் நின்மதி இல்லாமல் மன உளைச்சலில் இருந்திருக்கின்றார் நிவாஷினி. இவருக்கு எல்லாமே அவரின் குடும்பம் தான். இதனால் குடும்பத்தை ரொம்பவே பிடிக்குமாம். ஏனெனில் இவர் பிறக்கிறதற்கு முன்னாடியே இவரின் அப்பா விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து விட்டார். அதனால் அம்மா மட்டுமே இவரைக் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கின்றார். 

நிவாஷினிக்கு நண்பர்கள் என்று பெரிதாக யாருமே இல்லையாம். இவரைக் கேலி, கிண்டல் பண்ணியமையால் கத்தியை வைத்துக் கொண்டு தற்கொலை முயற்சி கூடப் பண்ணியிருக்கின்றார். இவ்வாறாக பல கஷடங்களைத் தாண்டி வந்த இவர் மீடியாவிற்குள் நுழைந்த பின்னர் தங்களிற்கென சொந்தமாக வீடு வாங்கி தற்போது சந்தோசமாக வாழ்ந்து வருகின்றாராம். 

Advertisement

Advertisement