• Jan 28 2026

உண்மையான பிக் பாஸ் இவர் தானா?... யார் என்று தெரியுமா?.. இதோ புகைப்படம்...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகளவில் பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழிலும் அதிக வரவேற்பு இருக்கிறது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது. மற்ற போட்டியாளர்களை விட மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற விஜே அர்ச்சனா பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார்.

இது குறித்து சில விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட ரசிகர்கள் அர்ச்சனாவின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விஷயமே பிக் பாஸின் குரல் தான்.


ரசிகர்களின் அதிகம் கவனம் ஈர்க்கும் இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று ரசிகர்கள் பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது அந்த குரல் யார் என்று தெரியவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வருபரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ ஆகும்.


சதியிஷ் சாரதி சஷோ என்பவர் தான் முதல் சீசனில் இருந்து போட்டியாளர்களிடம் பேசி வரும் பிக் பாஸ் குரல் ஆவார். இதோ அவருடைய புகைப்படம்..


Advertisement

Advertisement