• Jan 18 2025

லவ்டுடே பட கதாநாயகி இவானா யார் தெரியுமா?- இத்தனை படங்கள் நடித்திருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் சிறு பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வரவேற்பு அளிப்பதில்லை, பெரிய பட்ஜெட் படங்களையே விரும்பி பார்க்கிறார்கள் என்கிற பேச்சு கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த படம் தான் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு வசூலிலும் சக்கை போடு போட்டு வருகின்றது. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் இவானா. இவருக்கு இந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளம் குவிந்துள்ளனர் எனவே இவருடைய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி பார்ப்போம்.


அதாவது இவானா பெப்ரவரி 25ம் திகதி கேரளாவில் பிறந்துள்ளார். இவருக்கு ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில் என்பதால் அங்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததாம். இதனால் 2012ம் ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

பின்னர் மூன்று வருடங்கள் கழித்து மோகன்லால் நடிப்பில் வெளியான ராணி பத்மினி படத்தில் நடித்திருந்தாராம். இவருடைய இயற்பெயர் அலைனா. இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் படத்தில் நடிக்கும் போது தான் இவருடைய பெயர் இவானா என்று மாற்றப்பட்டதாம்.


நாச்சியார் படத்தில் இவருடன் ஜோதிகா மற்றும் ஜு.வி பிரகாஷ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இவானா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருந்தார் என்பதும் முக்கியமாகும்.மேலும் பாலா படத்தில் நடித்ததால் தான் தமிழில் வாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்ததாம். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹுரோ திரைப்படத்தில் மதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாராம்.


ஹுரோ படத்தில் இவருடைய நடிப்பைப் பார்த்து தான் லவ்டுடே படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததாம். இப்போது காலேஜ் படித்து வரும் இவர் படிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றாராம். மேலும் கதை நன்றாக இருந்தால் நான் யாருடைய படத்தில வேணும் என்றாலும் ரெடியாக இருக்கின்றேன் எனக் கூறி வருகின்றாராம். இதனால் இவருக்கு தொடர்ந்து நல்ல படவாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement