• Jan 18 2025

பிக்பாஸ் தனலட்சுமி பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள் இதோ... இவருக்குள் இத்தனை பொய், பித்தலாட்டங்களா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனில் கலந்து கொண்டு பலராலும் அறியப்பட்ட ஒருவரே தனலட்சுமி. போட்டியாளர்கள் ஒவ்வொருவருடைய சொந்தக் கதையை கேட்டு விட்டு எல்லாருமே அமைதியாக இருந்து விட்டு பின்னர் ஒப்பாரி வைச்சது என்றால் அது தனலட்சுமியோட கதை கேட்டுத்தான். 


அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முதல் இவர் டிக்டாக் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமானார். டிக்டாக்கில் இவரை எல்லோருமே சுகி என்று தான் அழைப்பார்கள். இவரின் அம்மா பெயர் தேவி. இவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. 

இவரின் அப்பா கூட இல்லை என்று கூறி இருந்தார். அதாவது இவரின் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் சின்ன வயதிலேயே கல்யாணம் ஆகிடிச்சு. இதனால் அவர்கள் இருவரும் தங்களுடைய வேலைகளைத் தனித்தனியாக பார்த்திட்டு இருக்கின்றார்கள். அதாவது தனித் தனியாக தான் இருந்து வருகின்றார்கள். அதுமட்டுமல்லாது வேறு ஒருத்தர் கூடப் போய்விட்டார் என்றும் கூறப்படுகின்றது. 

இவ்வாறாக ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் தனலட்சுமி. இவர் மே மாதம் 17 ஆம் தேதி ஈரோட்டில் பவானி என்ற இடத்தில் பிறந்தார். இவரின் தாயார் கிட்டத்தட்ட 21 வருடங்களாக தனியாக இருந்து தான் இவர்களை வளர்த்து வந்திருக்கின்றார். மேலும் போடுவதற்கு ட்ரெஸ் இல்லாத அளவிற்கு கூட இருந்திருக்கின்றார்கள்.

மேலும் இவரின் தாயார் தான் பல வருடங்களாக கஷ்டப்பட்டு சம்பாதிச்ச செயினை 23000 ரூபாவிற்கு விற்றுத்தான் இவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். இவரின் அம்மா தெருவில் ஜூஸ் விற்றல் மற்றும் 5,10 ரூபாவிற்கு சீட்டுப்பிடித்தல் போன்ற தொழில்களையே மேற்கொண்டு வந்தார். அதுமட்டுமல்லாது தெருவோரத்தில் ட்ரெஸ் கூட விற்றிருக்கின்றார். இவ்வாறாக ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் தனலட்சுமியை வளர்த்திருக்கின்றார் அவரின் தாயார்.


தனலட்சுமி படிச்சது எல்லாமே அரச பள்ளி ஒன்றில் தான். இவருக்குப் படிப்பை விட நடிப்பு நல்லாவே வரும். இதனால் 16 வயதிலிருந்தே டிக்டாக் பண்ண ஆரம்பித்து விட்டார். அதில் அதிகமாக பேய், முனி போன்ற வேஷங்களைப் போட்டே வீடியோ வெளியிட்டு வந்தார்.

ஆனாலும் இவருக்கு அன்றுமுதல் இன்றுவரை எதிர்மறையான விமர்சனங்கள் தான் இருந்து வருகின்றன. அதாவது இவ்வளவு ஏழ்மையான இவங்க கிட்ட தற்போது பெரிய வீடு, கார் எல்லாமே எப்படி இருக்கும், இது என்க இருந்து கிடைச்சது எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இவ்வாறான தனலட்சுமியிடம் ஒரு சில நல்ல குணமும் இருக்கு. அதாவது கான்சர் நோயினால் பாத்திக்கப்பட்ட அங்காடித்தெரு படத்தில் நடித்த சிந்து என்பவருக்கு இவர் உதவி புரிந்திருக்கின்றார். இதற்காகப் பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து சிந்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் "தன்னைப் பார்க்க வரும்போது தனலட்சுமியின் அம்மா தான் கார் ஓட்டி வந்திருந்தார்" எனக் கூறியிருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. அதாவது ஏழ்மையான குடும்பத்தில் உள்ள இவர்களிடம் கார் எப்படி என்று..? 

அதுமட்டுமல்லாது இவர் அப்பா சின்ன வயசிலேயே தங்களை விட்டு பிரிந்து விட்டதாக கூறி இருந்தார். ஆனால் இந்த வருடத்திலேயே இவர் தனது தந்தையுடன் இணைந்து ஒரு டிக்டாக் வீடியோவையும் தனது வீட்டில் வைத்து எடுத்திருக்கின்றார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் எதற்காக இத்தனை பொய், பித்தலாட்டம் எனக் கூறி அவரை திட்டி வருகின்றனர். ஆனால் இவரின் சொந்த வாழ்க்கை கதை இதுவரை யாருக்குமே முழுமையாக தெரியவில்லை.

Advertisement

Advertisement