• Mar 17 2025

பாக்கியாவால் வீட்டில் உருவான குழப்பம்..! கோபத்தின் உச்சியில் செழியன்!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா ஹாஸ்பிடலுக்கு வந்து செல்விய பாத்து உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்திருக்கேன் என்கிறாள். அதுக்கு செல்வி நீ எதுக்கு சாப்பாடு எல்லாம் எடுத்துக் கொண்டு வாற என்று கேக்கிறாள். பிறகு பாக்கியா செல்விய வீட்டுக்குப் போ நான் இவனப் பாக்கிறன் என்று சொல்லுறாள். அதைக் கேட்ட செல்வி இல்ல அக்கா பரவாயில்ல நான் நிக்கிறன் என்கிறாள்.

பிறகு செல்வி தன்ர பிள்ள பண்ணது தப்புத் தான் அதுக்காக இப்படியா அடிக்கிற என்று சொல்லி அழுகுறாள். பின் ஹாஸ்பிடல் பில் எல்லாத்தயும் பாக்கியா தான் கட்டுவதாகச் சொல்லுறாள். இதைத் தொடர்ந்து செல்வி ஆகாஷைப் பாத்து இனிமேலாவது நம்ம தகுதி அறிஞ்சு நடந்துக்கோ என்று சொல்லுறாள். பின் ஜெனி பாக்கியாட்ட கோபப்பட்டது தப்பு என அமிர்தா சொல்லுறாள். இதைக் கேட்ட ஜெனி கோபத்தில நான் எல்லாத்தயும் சரியாத் தான் புரிஞ்சுகிட்டேன் என்கிறாள்.


அப்புடியே ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி வந்து இங்க என்ன பிரச்சனை என்கிறாள். பிறகு அமிர்தா கதைச்சதுக்கு ஈஸ்வரி அவளப் பேசுறாள். இதைக் கேட்ட பாக்கியா எதுவுமே கதைக்காம இருக்காள். பின் பாக்கியா எழிலுக்கு நடந்ததெல்லாத்தையும் சொல்லி கவலப்படுறாள்.

பிறகு பாக்கியா ஹாஸ்பிடல் போனதுக்கு செழியன் பேசுறான். இதைக் கேட்ட எழில் நீ தேவையில்லாம இப்ப அம்மாவப் பேசுற என்று சொல்லுறான். இப்படியே கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அடிபட்டுக் கொண்டிருக்கினம். பிறகு பாக்கியா அதுதான் நீ எல்லாத்தயும் செய்திட்ட எல்லோ இன்னமும் உன்ர கோவம் குறையலயோ என்று கேக்கிறாள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement