தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்ஜை தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அப்பா அரசியலிற்குள் நுழைந்ததும் மகன் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். படப்பிடிப்புகள் அனைத்தும் மிகவும் ஒழுங்கமைப்புடன் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது.
குறித்த நிறுவனத்திடம் சஞ்ஜை முன்கூட்டியே 25 கோடி பணத்தொகையினை பட பட்ஜெட்டை தீர்மானித்து வாங்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் "ராஜன்" பட கதாநாயகன் சந்திப் கிஷான் நடித்து வருகின்றார். மற்றும் இப் படத்தின் படப்பிடிப்புகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும் தற்பொழுது கோகுலம் ஸ்டூடியோவில் சூட்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் பரியா அப்துல்லா எனும் தெலுங்கு பட நடிகை நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஹீரோயின் தற்போது "வள்ளி மயில் " எனும் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!