• Mar 30 2025

பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு பிரச்சினை..! அடுத்த படம் வெளியாகுமா..? இல்லையா..?

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே எனும் படத்தை இயக்கினார். எந்த நடிகரும் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒத்து போகாமையினால் தானே நடித்து மக்களை entertain செய்தார். தொடர்ந்து இவர் தற்போது தனது நண்பன் ஓ மை கடவுளே பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகிய "டிராகன்" திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டுகளாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு இருந்த இப் படம் 150 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.


இவர் இப் படத்தினை அடுத்து விக்கினேஷ் சிவன் தயாரிப்பில் lik எனும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றது. ஆனால் இயக்குநர் படத்தில் ஒரு முக்கிய பாடல் காட்சியை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு சுமார் 5 கோடி செலவாகும் எனவும் கூறியுள்ளார். 


இதனை கேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான லலித் குமார் தயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப் படத்திற்கு ஏற்கனவே பாரிய தொகையினை இயக்குநர் வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement