• Mar 29 2025

பாரதிராஜாவிற்கு என்ன ஆச்சு..! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது...

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி ஒன்று நேற்று மாலை வெளியானது. மதுரையைச் சேர்ந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் 43 ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த மனோஜின் மறைவு திரையுலகின் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.


அவரது குடும்பத்தினர் நேற்று அவரை மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ஆனால் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. மனோஜின் மறைவு திரை உலகிற்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி அவரது ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் திரை உலகினர் என பலர் அவரது இறுதி சடங்கிற்கு சென்றுள்ளனர்.


இந்த நிலையில் மகனது இறப்பை தாங்கமுடியாமல் பாரதிராஜா கால் நடக்க முடியாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மனோஜின் தகனத்தின் பின்னர் காரில் வந்து இறங்கிய இவரை உறவினர்கள் கதிரையுடன் சேர்த்து தூக்கி சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement