இந்திய சினிமா உலகம் என்றாலே இசை ஒரு முக்கியமான பங்காற்றுகின்றது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பின்னணி பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். முன்னணிப் பாடகர்கள் ஒரு பாடலைப் பாடுவதற்காக ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சம்பளம் வாங்குவது சாதாரணமாகி விட்டது.
எனினும், இப்பொழுது வெளியாகியுள்ள தகவலின் படி, ஒரு பாடலுக்கே ரூ.3 கோடி சம்பளம் வாங்கும் இசை இளவரசராக ஏ.ஆர். ரஹ்மான் விளங்குகின்றார். 1992ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், தன்னுடைய தனிப்பட்ட இசை ஸ்டைலால் இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த இசை அமைப்பையும் மாற்றியமைத்தார். மிக நேர்த்தியான இசை அமைப்பு, புதுமையான முயற்சி, சர்வதேச தரமான ஒலி வடிவமைப்புக்கள் மூலம் அவர் அனைவரின் மனதையும் வசப்படுத்தினார்.
தற்போது வெளியான தகவலின் படி, ஏ.ஆர். ரஹ்மான் ஒரு பாடலை பாடுவதற்காக மட்டும் ரூ.3 கோடி வரையிலான சம்பளம் பெற்றுவருகின்றார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அளவில் வேறுயாரும் இந்த அளவிற்கு சம்பளம் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலாக, ஏ.ஆர். ரஹ்மான் தற்போது ஒரு முழு திரைப்படத்திற்கு இசையமைக்க ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய திரையுலகில் மிகச் சில இசையமைப்பாளர்களுக்கே இத்தகைய பெரிய சம்பள தொகைகள் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!