தமிழ் சினிமா ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம் தான் ‘வீர தீர சூரன்’. விக்ரம் நடிப்பில், 'சித்தா' படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், 'வீர தீர சூரன்' படத்தைப் பார்த்த பிறகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பாராட்டு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சினிமாப் படைப்புகளைப் பாராட்டுவதிலும், ஊக்குவிப்பதிலும் முன்னணியில் உள்ள கார்த்திக் சுப்புராஜ் தற்பொழுது 'வீர தீர சூரன்' படம் மீதான அவரது பாராட்டுக்களைக் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் அதில், "விக்ரம் சார் திரையரங்கில் வெறித்தனம் காட்டியுள்ளார் என்றதுடன் 'வீர தீர சூரன்' திரைக்கதையை இயக்குநர் சிறப்பாக எழுதியுள்ளார் என்றார். மேலும் இக்கதையில் அட்டகாசமான ஆக்சன் , திரில்லர் மற்றும் மாஸ் காட்சிகள் என்பன நிறைந்துள்ளது எனவும் கூறியுள்ளார். அத்துடன் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. அத்துடன் சமீப காலமாகவே, கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளங்களில் உண்மையான திறமைக்குப் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!