பாலிவூட்டின் ஸ்டைலான நடிகராக வலம் வரும் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது திறமையான நடிப்பால் இந்திய சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளார். அழகு, நடிப்பு மற்றும் டான்ஸ் என அனைத்திலும் சிறந்து விளங்கிய இவர் தற்பொழுது இயக்குநர் அவதாரத்தில் பிரவேசிக்கின்றார் என தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
2006 ல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘கிரிஷ்’ படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'கிரிஷ் 3' போன்ற பல படங்களில் நடித்திருந்தார். நடிப்புத் துறையில் தனது பங்களிப்பை நிரூபித்த ஹிருத்திக், தற்பொழுது ‘கிரிஷ் 4’ படத்துடன் இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஹிருத்திக் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹிருத்திக் தனது அடுத்தகட்ட நகர்வாக 'கிரிஷ் 4' படத்தில் இயக்குநராக வருவது அவரது வாழ்க்கைக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Listen News!