தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ள த.வெ.க தலைவர் விஜய் தற்பொழுது அரசியல் வாதிகள் மீது நேரடியான விமர்சனங்களைச் செய்துள்ளார். குறிப்பாக விஜய், “பெயரில் மட்டும் வீராப்பு இருந்தா போதாது, மக்கள் உரிமையை மதிக்கணும்!” என்று கூறியுள்ள வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருகின்றது.
பொதுக் கூட்டத்தின் போது மேடையில் கதைத்த விஜய் ஆட்சி அதிகாரிகளை நேரடியாக சுட்டிக்காட்டிக் கூறியது மக்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்போது விஜய், “மக்களை சந்திக்க தடை விதிக்க, நீங்கள் யார்? மக்கள் என்னை சந்திக்க விரும்புகிறார்கள். நான் அவர்களிடம் நேரில் சென்று பேச விரும்புகின்றேன். அதைத் தடுக்க முயற்சிக்கிறவர்கள் ஜனநாயகத்தை எதிர்த்து நிற்பவர்களே!” என்று கூறியுள்ளார்.
இந்த ஒரு வரி இப்பொழுது திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதுவரை “அமைதியான அரசியல்வாதி” என்ற பிம்பத்தில் இருந்து, தற்போது தடுமாற்றம் ஏற்படுத்தும் தாக்கமான குரல் என விஜய் மாறியிருக்கின்றார். இவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும் தளபதி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!