• Jan 18 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?- இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 7வது சீசன் 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்ச முடிவடைந்து டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். இதனால் வெற்றியாளர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

இப்போது பிக்பாஸில் Freeze Task நடந்து வருகின்றது.இதில் எல்லா போட்டியாளர்களின் உறவினர்களும் வந்தனர், ஒரு பிரச்சனையும் இல்லாமல் போனது.ஆனால் ரவீனாவின் சித்தி மற்றும் சகோதரர் வீட்டிற்கு வர சில Code Word பயன்படுத்தி பிரதீப் குறித்து பேச பிக்பாஸ் அவர்களை உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற்றி இருக்கிறார். 


இந்த விஷயம் பிக்பாஸில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசித்ராவின் கணவர் மற்றும் பிள்ளைகள் இன்றைய தினம் வருகை தந்துள்ளர்.இதனால் ஹவுஸ்மேட்ஸும் செம சந்தோசத்தில் இருக்கின்றனர். 

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ரவீனா, விக்ரம், விசித்ரா ஆகிய 3 பேர் மட்டும் தான் நாமினேஷனில் இடம்பெற்று இருந்தனர்.


இதில் விசித்ரா வெளியேற நிச்சயம் வாய்ப்பு இல்லை, ரவீனா மற்றும் விக்ரம் தான். இவர்களின் ரவீனா உறவினர்கள் வீட்டிற்கு வந்து கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர், எனவே மணி-ரவீனா இருந்தால் கண்டிப்பாக கண்டன்ட் கிடைக்கும்.ஆகவே இந்த வாரம் விக்ரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement