• Jan 19 2025

குளியலறையில் உதவியாளரை துன்புறுத்திய பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்பட நடிகர்- முக்கிய பிரபலம் சொன்ன பகீர் தகவல்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் வின் டீசல்.பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவராகவும் காணப்படுகின்றார்.இந்த நிலையில் இவர் மீது அவருடைய முன்னாள் உதவியாளர் Jonasson என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதாவது கடந்த, கடந்த 2010-ம் ஆண்டு ‘ஃபாஸ்ட் ஃபைவ்’ படத்தின் படப்பிடிப்பின் போது தன்னை வின் டீசல்பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டு அட்லாண்டா ஹோட்டல் அறையில் இருவரும் "ஃபாஸ்ட் ஃபைவ்" திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் அந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.


  ஒரு நாள், நடிகர் வின் டீசல் தனது மார்பகங்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து முத்தமிட்டதாக ஜோனாசன் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை வின் டீசல் மறுத்துள்ளார்.ஆனால் அவரின் பாலியல் சீண்டல் அத்தோடு நிற்கவில்லை என்றும், தான் குளியலறைக்கு சென்றபோது, நிலைமை தீவிரமடைந்தது என்றும் அவர் கூறியுள்ளார். 

குளியலறைக்கு தன்னை பின்தொடர்ந்த டீசல், அவரது பிறப்புறுப்பை பிடிக்குமாறு அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். மேலும் அவர் அதற்கு இணங்காத பட்சத்தில் அவரை குளியரை சுவற்றில் தள்ளி, அவர் முன்பே சுயஇன்பத்தில் ஈடுபட்டு அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

 டீசல் அங்கிருந்து சென்ற சிறுது நேரத்தில், அந்த உதவியாளரை அங்கு பணியமர்த்திய நிறுவனம் அவரை அழைத்து, அவரை வேலையை விட்டு வெளியேற்றுவதாக கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement