• Jan 11 2025

யோகி பாபுவின் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்! எப்போது ரிலீஸ் தெரியுமா?

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர். அது மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்கு வருகிறார். இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படமான குழந்தைகள் முன்னேற்றக் கழகம் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. 


நடிகர் யோகிபாபு காமெடியனாக ரசிகர்கள் மனதினை வென்றவர். இவர் 'கோலமாவு கோகிலா, மண்டேலா,போட், தி கோட், மன்ஸ் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' .


யோகி பாபுவுடன் இந்த திரைப்படத்தில் நடிகர் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை இயக்குனர் ஷங்கர் தயாள் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement