பிரபல நடிகர் அஜித் இன்று துபாயில் நடைபெறும் கார் ரேஸில் தனது குழுவுடன் கலந்து கொண்டு வருகிறார். 24 மணி நேரம் நடைபெறவுள்ள இந்த கார் ரேஸ் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கார் ரேசிங் நடக்கும் ஸ்டேடியத்தில் ஒலித்த அஜித்தின் பாடலை அனிருத் தனது டுவிட் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அஜித் கார் ரேஸ் துவங்கவிருந்த நிலையில், அஜித்தை காண வந்திருந்த ரசிகர்களின் கோஷம் அரங்கை அதிரவைத்தது. மேலும் தனக்கு ஆதரவளிக்க வந்த ரசிகர்களை அஜித் சந்தித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அனிருத் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது துபாயில் கார் ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித்தின் திரைப்படத்தில் இருந்த ஆலுமா டோலுமா பாடல் ஒலித்தது. அந்த பாடலுக்கு அஜித்தின் ரசிகர்கள் கைதட்டி ஆட்டம் போடுகிறார்கள். அந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து AK சார் என்று வைப் பண்ணுவதுபோல பதிவிட்டுள்ளார்.
😍😍😍🕺💃🕺💃 Ak sir #Ajithkumar #AjithKumarRacing #24hdubai #AKRacing #DubaiRaceWeekend #Racing @SureshChandraa pic.twitter.com/VrYQxIoXEr
Listen News!