முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஜனநாயகன்’, இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விஜய் நடிக்கும் இந்தப் படம் கடைசி திரைப்படம் என்பதால், அவரது திரை வாழ்க்கையின் முக்கியமான படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இப்படத்தின் எதிர்பார்ப்பு, தற்போது வெளியிடப்படும் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் மூலம் இன்னும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தற்பொழுது ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, ‘ஜனநாயகன்’ படத்தின் ‘ராவண மவன்டா’ பாடல் இன்று இரவு 7.50 மணிக்கு வெளியிடப்படுகிறது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை அறிந்து ரசிகர்கள் தங்கள் excitement-ஐ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, பாடலை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
‘ராவண மவன்டா’ என்பது படத்தின் பெரும் ஹைலைட் song எனவும் கருதப்படுகிறது. பாடல் வரிகள், இசை மற்றும் நடனம் அனைத்தும் ரசிகர்களை மையப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.
Listen News!