பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பழனி பாண்டியனைப் பார்த்து நீங்க எல்லாரும் தைரியமா இருங்க நாளைக்கு உங்க எல்லாரையும் எப்புடியாவது வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்திருவோம் என்கிறார். பின் சரவணன் அம்மாவைப் பார்க்க பாவமா இருக்கு அவங்களையும் வீட்ட அனுப்புங்க என்று இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்கிறார். அதுக்கு இன்ஸ்பெக்டர் அதெல்லாம் முடியாது என்கிறார்.
பின் இன்ஸ்பெக்டர் உங்களை ஜெயிலுக்கு கூட்டிக்கொண்டு போகப்போறோம் என்று சொன்னதைக் கேட்ட உடனே எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். அதுக்கு கோமதி எல்லாரும் ஒன்னாவா அங்க இருப்போம் என்று கேட்கிறார். அதுக்கு இன்ஸ்பெக்டர் எல்லாரும் வேற வேற இடத்தில தான் இருப்பிங்க என்கிறார். அதைக் கேட்ட கோமதி ஷாக் ஆகுறார்.

அதனைத் தொடர்ந்து பாண்டியன் இன்ஸ்பெக்டர் கிட்ட என்ர பொண்டாட்டி கோமதிக்கு உடம்பு சரியில்ல அவளால ஜெயிலில எல்லாம் போய் இருக்க முடியாது என்கிறார். அதுக்கு இன்ஸ்பெக்டர் எங்களால இனி எதுவுமே பண்ண முடியாது என்கிறார். மறுபக்கம் அரசியைப் பார்த்து நாளைக்கு எல்லாரும் வெளியில வந்திடுவாங்க அழவேணாம் என்கிறார் சக்திவேல்.
அதனைத் தொடர்ந்து கோமதி வீட்டுக்கு வரேல என்றதைப் பார்த்த காந்திமதி கதறி அழுகிறார். பின் முத்துவேல் நல்ல வக்கீலைத் தான் ஏற்பாடு செய்திருக்கிறோம் நாளைக்கு வெளியில வந்திடுவாங்க கவலைப்பட வேணாம் என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் குடும்பம் மயில் செய்ததை நினைத்துப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!