ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் இந்த படம், அவரது திரை வாழ்க்கையின் ஒரு முக்கியமான படமாகும். ஏனெனில், இந்த படம் அவரது கடைசி திரைப்படம்.
ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி உலகமக்கள் பார்வைக்கு வருகிறது. இதில் விஜய்யுடன் இணைந்து ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஷா. இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதன்போது ஜேசன் ஷா,"ஒவ்வொரு முறையும் விஜய் சார் ஸ்பாட்டில் வந்து நிற்கும் போது எனக்கு ஒரு மிகப்பெரிய சக்தி, எனர்ஜி வந்து சேரும். இதற்கு முன்பு நான் இப்படித் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் படத்தில் பங்கேற்றதில்லை. இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கடவுள் கொடுத்த பரிசாகவே இருக்கிறது." என்றார்.
அவர் மேலும், "விஜய் சார் எனக்கு சிறிய வயதிலிருந்தே பெரிய உத்வேகமாக இருந்தவர். அவரின் மாஸான காட்சி, ஸ்டைல் என அனைத்தும் மனதை கவரும் அளவில் இருக்கிறது. அவருடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஒரு கனவு." என்று கூறியுள்ளார்.
இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர், “ஜேசன் ஷா சொன்னது உண்மை தான், தளபதி ஸ்பாட்டில் வந்தாலே உத்வேகம் வரும்!” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
Listen News!