2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் 8 சீசன்களை கடந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பிரதர் என்ற நிகழ்ச்சி தான் இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இவர் கமல்ஹாசனின் ஸ்டைலை பின்பற்றாமல், தனக்கு தோன்றிய வழியிலேயே நிகழ்ச்சியை கொண்டு சென்றார். ஆரம்பத்தில் இவருக்கு எதிராக பல கருத்துக்கள் கிளம்பின. ஆனால் இறுதியில் அவர் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் பற்றிய தகவல்கள், இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் போன்றவை சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளதாம். மேலும் இதில் வழமை போல 18 போட்டியாளர்களும், மொத்தமாக 105 நாட்களும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!