இந்திய சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன், மிகப்பெரிய ஹீரோக்களை இயக்கி வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் இயக்குநர் அட்லீ. இவர் தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் ஆரம்பமாகி விஜய்யுடன் தெறி , மெர்சல் , பிகில் என ஹிட் வரிசையை கொடுத்து வந்தவர். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து எடுத்த ‘ஜவான்’ திரைப்படம், ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலைக் கொடுத்த பெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது.
இந்த வெற்றிக்குப் பிறகு, அட்லீ யாரை ஹீரோவாக வைத்து அடுத்த படத்தினை இயக்கப் போகிறார்? என்பதை ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்தது. தற்பொழுது அட்லீ, நடிகர் அல்லு அர்ஜுனின் கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ளது.
அட்லீ இயக்கும் இப்புதிய படம் பிரமாண்டமான படமாக உருவாகின்றது. தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தில், ஹீரோவாக அல்லு அர்ஜுன் நடிக்கின்றார் என்பது உறுதியான நிலையில் ஹீரோயினியாக ஹாலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்துக்காக பிரியங்கா கேட்டுள்ள சம்பளம், ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி வரை எனவும் கூறப்படுகின்றது. இது இந்திய நடிகைகள் கேட்கும் சம்பள அளவுகளில் மிகப் பெரிய தொகையாகும். இத்தகைய சம்பளம் பாலிவுட்டில் சில நடிகர்களே பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!