தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து தற்போது சென்னையில் பிரம்மாண்டமான ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட வருடங்களாக திரைத்துறையில் வெற்றி நடைபோட்டு வரும் இந்த ஜோடி, தற்போது படத்தயாரிப்பு மற்றும் தொழில்துறையில் புதிய முயற்சியாகப் பலவற்றை செய்து வந்த நிலையில் தற்பொழுது ஸ்டூடியோ ஒன்றினையும் தொடங்கியுள்ளனர்.
இது சினிமா மற்றும் விளம்பரத்துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் முயற்சி எனக் கருதப்படுகிறது. அத்துடன் 7000 சதுர அடியில் இந்த ஸ்டூடியோ அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் வெற்றிகரமாக நடித்து வருகிறார். திரைப்பயணத்தில் பல படங்களில் நடித்ததுடன் தற்போது அவர் தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் தன்னை நிலைநாட்டி வருகின்றார். இவர்கள் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் மூலம் சிறப்பான சினிமாக்களை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது, சென்னையில் தொடங்கிய இந்த ஸ்டூடியோ புதிய தொழில் முயற்சியாக அமைந்துள்ளது.
இந்த ஸ்டூடியோ மூலம் சிறிய படங்கள் மற்றும் விளம்பரங்கள் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. அத்துடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திரைத்துறையில் மட்டுமல்லாது தொழில்துறையிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் ஸ்டூடியோ தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!