தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய நடிகை சாய் பல்லவி, சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். சமீபத்தில், அவருடைய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில், சாய் பல்லவி தனது இயல்பான அழகு மற்றும் எளிமையான உடையில் மிகவும் அழகாக இருக்கின்றார். மேலும் சாய்பல்லவி அதில் எந்த மேக்கப்பும் இல்லாமல் சாதாரண லுக்கில் இருப்பதனைப் பார்த்த ரசிகர்கள் சந்தோசமாக கமெண்ட் செய்துள்ளனர்.
சாய் பல்லவி தனது ரசிகர்களை திரைப்படங்களில் மட்டும் மல்லாது சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியடையச் செய்துள்ளார். சமீபத்தில் அவர் நாகசைதன்யா உடன் நடித்த தண்டேல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்போது, சாய்பல்லவி தனது அடுத்த படத்தை நடிகர் ராணாவுடன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் தற்பொழுது வெளியான சாய் பல்லவியின் வீடியோ இன்ஸ்டாகிராமில் பெரிய அளவில் வைரலாகியதுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் எப்பொழுதும் தன் இயற்கையான அழகால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றார் என்பது இதன் மூலம் அறியமுடிகிறது.
Listen News!